பழுலுல்லாஹ் பர்ஹான்
யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் சமூக எழுச்சி திட்டத்தின் கீழ் நடைபெற் ற நிகழ்வுகளில் சிறப்பான முறையில் செயற்பட்ட அங்கத்தவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சயீத் தலைமையில் இடம்பெற்ற இப் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் கலந்து கொண்டார்.
இதன் போது யூஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் , கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள்,பொது பணிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆகியோர் அதிதிகளினால் சான்றிதழும்,நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி பரிசளிப்பு விழாவில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் ,காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி ,காத்தான்குடி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சிவநாயகம்,164 சீ கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம். றவூப் , யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் அமைப்பாளர் ஏ.எஸ்.ஏ.ஜௌஸகி அதன் செயலாளர் சிஹாப் அதன் உப தலைவர் அபீப்,உப செயலாளர் அயாஷ் ,அதன் பொருளாளர் நப்லிஹ், யூஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் யஹ்யா மற்றும் அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவருகின்றமை குறிப்படத்தக்கது.