முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP (Edit செய்யப்படாத வீடியோ மற்றும் , ஹன்சார்ட் அறிக்கை)

முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP.

(முழுமையான ஆதாரத்துடனான பதிவு)

சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட
தன் இனத்தோரையே கொன்று குவித்து ,
நாட்டின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிய வரலாற்று கறை கொண்டதும் ,
சோஷலிச சித்தார்ந்தத்தையும் ,
மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பெரும்பாண்மை சிங்களவர்களால் விமர்சிக்கப்படும்
JVP யினர்
காத்திருந்தாற்ப் போல் –
2019 ஏப்ரல் குண்டு வெடிப்பிற்கு பின்னர் தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை பல சந்தர்பங்களிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.!

இதில் குறிப்பாக முஸ்லீம் விவாக சட்டத்தை கூறலாம்.

கடந்த வாரம் அக்கரைப்பற்றில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ,

“JVP யினர் முஸ்லீம் விவாக சட்டத்திற்கு எதிரானவர்கள்”
என்று ஒரு பத்திரிகை  செய்தி மற்றும் சமூக வலைத்தள வீடியோவை மேற்கோள் காட்டி “டில்வின் மற்றும் அவர் நன்பர்கள் JVP என்று தெரிவித்தார்”

அதனை JVP மற்றும் அதன் கூட்டு ஆதரவாளர்கள் ,
அவ்வாறு ரில்வின் சில்வா கூறவில்லை என்றும் ,
JVP யினர் எச்சந்தர்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என்றும் ,
அது ஒரு Edit செய்யப்பட்ட வீடியோ என்றும் ,
JVP யினர் கூறியதை திரிபுபடுத்தி விழங்கப்படுத்துகின்றார் என்றும் ,
பாராளுமன்றத்தில் அப்போதே அதாவுல்லாஹ் அவர்கள் அவரை ஏன் கேள்வி கேட்கவில்லை என்றும் ,

மாற்று கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.!

தங்களின் புதிய நம்பிக்கையும் , இஸ்லாமிய மார்கத்தின் பெயரால் போடப்பட்ட தங்களின் முதலுக்கு சேதாரமாகி விடுமோ என்ற அச்சத்தால் தடுமாறி
இவ்வாறான முறணான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.!

ஆனால் , தேசிய காங்கிரஸின் தலைவர் “ரில்வினோ யாரோ அவர்களின் நன்பர்கள் JVP யினர் சொல்லியுள்ளனர்” என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார் .

அதாவது ,
முஸ்லீம் திருமண எதிர்ப்பை இங்கு யார் கூறினார் என்பதல்ல விடயம்,
JVP ன் நிலைப்பாட்டையே தேசிய காங்கிரஸின் தலைவர்  கூறியுள்ளார்.!

இல்லை என்றால் ரில்வின் கூறவில்லை பிமல் ரத்நாயக்க தான் கூறியது என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?? பாராளுமன்றத்தில் மறுப்பு தெரிவிக்க அப்போது தேசிய காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லை.

JVP யினர் எச்சந்தர்பத்திலும் கூறவில்லை என்பவர்களுக்கு ,

கடந்த 2019/07/31 ல் பாராளுமன்றத்தில் முஸ்லீம் விகாக சட்டத்திற்கு எதிராக பேசிய Edit செய்யப்படாத வீடியோ மற்றும் ,
ஹன்சார்ட் அறிக்கையும் ,
JVP யினரின் முஸ்லீம் விவாக சட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதற்கு மிகத்  தெளிவான , திரிபு படுத்தப்படாத ஆதாரங்கள் தான் இவைகள் .!

JVP யினரின் முஸ்லீம் விவாக சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு சம்பந்தமாக பிமல் ரத்நாயக்க அவர்களின் பல வீடியோகளை முன் பகுதி , பின் பகுதி இல்லாமல் இடையில் ஈயம் பூசிய  கருத்தை மக்கள் மத்தியில் காட்டி நவீன இஸ்லாத்தின் காவலர்கள் JVP யினர் தான் எனக் கூற முற்படுகின்றனர்.!

இவர்களின் கடந்த கால வரலாறு , அதிகார பேராசை என்பவற்றை மூலதனமாகவும் ,
இருண்ட அனுபவங்களை கொண்ட பெரும்பாண்மை சிங்களவர்களால் எப்போதும் நிராகரிக்கப்படும் இவர்களின் இறுதி நம்பிக்கையாக ,
முஸ்லீம்களை கவருவதற்கே நாடு தழுவிய ரீதியில் உணர்சிவசப்பட்ட முஸ்லீம்கள் சிலரை  இணைத்துள்ளனர்.

அவர்கள் JVP யினரை வெள்ளையடித்து உங்கள் முன் கொண்டு வரவுள்ளனர்.!

JVP யின் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளதாவது ,

 முஸ்லீம் விவாக சட்டமானது ,
உண்மையில் சிறுவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் சட்டமே ஆகும் என்றும் ,

முஸ்லீம் விவாக சட்டமானது சிறுவர்களின் உரிமைகளை மீறுகிறது என்றும் ,

முஸ்லீம் விவாக சட்டமானது முஸ்லீம்களின்   ஒரு சிறிய குழுவினருக்கு மாத்திரமே தேவையானது என்றும் ,
அதனை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் கூட பிழை காண்கின்றனர் என்றும் ,

2012 ஆண்டிற்கு பின்னரான புள்ளி விபரத்திற்கு அமைய நாட்டில் முஸ்லீம்களும் , மலாய் முஸ்லீம்கள் மாத்திரமே இவ்வாறு சிறுவயது திருமணத்தை நடாத்தியுள்ளனர் என்ற புள்ளி விபரத்தை சபையில் சமர்பித்தார்.

மேலும் ,
நாட்டில் முஸ்லீம்களுக்கு என்று மாத்திரம் உள்ள திருமண சட்டத்தை இல்லாமல் செய்து அவர்களுக்கு தேவை என்றால் ,

“எல்லா இனங்களுக்குமான  பொதுவான சட்டத்தை கொண்டு திருமணங்களை நடத்தி கொள்ளட்டும் – நாங்களும் அதனையே ஆதரிக்கின்றோம்”

என்று மிகத் தெளிவாக JVP யின் இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் பதிந்துள்ளார்.

இதுவே JVP யினரதும் அவர்களோடு கூட்டு சேர்ந்தவர்களினதும் நிலைப்பாடுமாகும் என்பதை புரிந்து கொள்ளலாம் .!

CLICK HERE Video (3)