வடக்கு ,கிழக்கு மீழ் குடியேற்றத்துக்கு ரூ.160 மில்லியன் ஒதுக்கீடு !

 

D._M._Swaminathanவடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக புதிய அரசாங்கத்தினால் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சு தெரிவித்தது.

ஒரு குடும்பத்துக்கு 38 ஆயிரம் ரூபாய் வீதம் 2,175 குடும்பங்களுக்கு இந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்  தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்துக்கான புதிய அரசாங்கத்தினால் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளத. இதில் ஒரு குடும்பத்தின் மீள்குடியேற்றத்துக்காக 25 ஆயிரம் ரூபாவும் தங்களது காணியை சுத்தப்படுத்தல் மற்றும் அதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 13 ஆயிரம் ரூபாவும் என 38 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த தொகையானது, முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் மீள்குடியேறும் மக்களுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்களில் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேறவுள்ள 204 குடும்பங்களும் வடக்கின் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறவுள்ள ஆயிரத்து 971 குடும்பகளும் முதற்கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதில் பயனடையும் குடும்பங்கள் தொடர்பில் மாவட்டமட்ட அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.