பாலஸ்தீன போராட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது ? ஏன் அதை மீட்க முடியவில்லை ? அல்-குர்ஆன் என்ன கூறுகின்றது ?

உலகில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கும் பாலஸ்தீனில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் உள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட சமூகம் அதற்கு எதிராக போர் புரிவது அந்த சமூகத்தின்மீது கடமையாகும். ஆனால் யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புனிதப் பிரதேசமான பாலஸ்தீனை மீட்பது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்கள்மீதும் கடமையாகும்.
அவ்வாறென்றால் பாலஸ்தீன் எதற்காக முக்கியத்துவம் பெறுகின்றது ?
ஜெரூசலத்தை மைய்யமாகக்கொண்ட பாலஸ்தீன பிரதேசம் நீண்ட வரலாறுகளைக்கொண்ட ஓர் மிகப் பழமை வாய்ந்த பூமி. அங்கு பல நபிமார்கள் வாழ்ந்தார்கள். இப்ராஹீம் நபி, லூத் நபி போன்றவர்கள் பாலஸ்தீனை நோக்கி ஹிஜ்ரத் சென்றிருக்கின்றார்கள். அத்துடன் நபிமார்கள் பலரது அடக்கஸ்தளமும் அங்கே உள்ளது.
கிறிஸ்தவர்களினால் இயேசு என்று அழைக்கப்படுகின்ற ஈசா நபி அவர்கள் பிறந்த “பெத்லகேம்” என்னும் இடமும் பாலஸ்தீனிலேயே உள்ளது. அத்துடன் ஈசா நபி அவர்கள் உயர்த்தப்பட்ட ஜெரூசலமும் அங்கேதான் உள்ளது.
“மஸ்ஜிதுல் அக்சாவையும், அதனை சூழவுள்ள பகுதிகளையும் அருள்பாலிக்கப்பட்ட பூமியாக ஆக்கினோம்” என்று அல்-குர்ஆனில் கூறப்படுகின்றது.
முகம்மது நபி அவர்களும், தோழர்களும் சுமார் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தசை கிப்லாவாக நோக்கி தொழுதார்கள். இதனை அங்கு வாழ்ந்த சுலைமான் நபி அவர்கள் கட்டினார்கள்.
முகம்மத் நபி அவர்கள் விண்ணுலக பயணமான “மிஹ்ராஜ்” சென்றபோது மக்காவில் இருந்து பைத்துல் முகத்தசுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விண்ணுலகம் பயணமானார்கள்.
அத்துடன் அல்-குர்ஆனில் இந்த நகரத்தின் பெயரை பாலஸ்தீன் என்று நேரடியாக கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அல்-குர்ஆன் இறக்கப்பட்ட காலங்களில் ஜெரூசலத்துக்கு வேறு பெயர் இருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம்.
இரண்டாவது ஹலீபா உமர் அவர்களின் ஆட்சியில் பாலஸ்தீனம் கைப்பேற்றப்பட்டதுடன், ஹலீபா உமர் அவர்கள் அங்கு நேரடியாக சென்று தொழுதார்கள். அவர் தொழுகை நடாத்திய இடத்தில் “மஸ்ஜிதுல் உமர்” என்னும் பள்ளிவாசல் இப்போதும் அங்கு உள்ளது.
உலகில் உள்ள முஸ்லிம்கள் புனித யாத்திரை செய்யக்கூடிய புனிதமான இடங்கள் மூன்று ஆகும். அதில் மக்காவுக்கும், மதீனாவுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ அதே முக்கியத்துவம் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) அமைந்துள்ள பாலஸ்தீன மண்ணுக்கும் உள்ளது.
முஸ்லீம்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புனித பிரதேசத்தை யூதர்கள் உரிமை கோருகின்றனர். அதில் கி.மு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய மன்னர் தாவீது ஜெரூசலம் நகரை நிறுவியதாகவும் அவரது மகன் சாலமனால் புகழ்வாய்ந்த “சாலமன் தேவாலயம்” அங்கு கட்டப்பட்டதாகவும் யூதர்கள் கூறுகின்றார்கள்.
இங்கே இவர்கள் கூறுகின்ற “தாவீது” என்பது தாவூத் நபி அவர்களையும், “சாலமன்” என்பது சுலைமான் நபி அவர்களையும் குறிக்கின்றது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற சாலமன் தேவாலயத்தை ஜெரூசலத்தில் மீண்டும் கட்டுவதற்கான முயற்சிகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதற்காக இஸ்ரேலின் தலைநகரை ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான அறிவிப்பை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்தார்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள வரலாறுகளை மைய்யமாகக்கொண்டு அல்-குர்ஆனில் கூறப்படுகின்ற முஸ்லிம்களின் புனித பிரதேசத்தை யூதர்கள் அபகரித்து ஆட்சி செய்கின்றார்கள்.
உலகில் ஐம்பதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் ஆட்சி அதிகாரத்துடன் வாழ்கின்ற முஸ்லிம்களின் புனித பிரதேசத்தை ஒரு சிறுபான்மை யூத குழுவினர் பலாத்காரமாக அபகரித்து ஆட்சி புரிகின்றனர்.
பெரும்பான்மையான முஸ்லிம்கள் மொழி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், மதரீதியாகவும் பிரிந்து நின்று தங்களுக்குள் சண்டை செய்கின்றனர். இவ்வாறான சண்டைகளை யூதர்களே மூட்டிவிட்டதுடன், ஒற்றுமைப்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது