காணாமல்போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.
காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளில் 10 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு குறித்த விவரங்களை கொண்டு தீர்வு வழங்க கூடிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரு அணிகளாக செயற்படுகின்றார்கள் ஒரு தரப்பு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடாது எனவும் இன்னொரு தரப்பு இதற்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குரிய தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தோடு குறித்த கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தங்களது உறவுகள் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனவும் பலருக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் தெரிவித்தனர்.