நாகரிக நோய்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1615975585345"}

Mohammed Nizous

ஒன்லைன் ஓடர் உணவுகளால்
பெண் லைன் கூடுது கிளினிக்கில்
சேலை கட்டி வேலை செய்தால்
சேலைன் கட்டும் நிலை வராது

மம்மிமாரு அடுப்படியில்
அம்மி உரலை மறந்ததனால்
கும்கி யானை போல் பெருத்து
டம்மி பீஸாய் வாழ்கின்றார்

கண்ட கண்ட படம் பார்த்து
கண்ட பார்வையும் மங்கிடுச்சு
கண்டம் போணில் உள்ளதனை
கண்டு கொள்ளாது இருக்கின்றார்

பாயில் படுத்து வாழ்ந்தவர்க்கு
நோயின் தாக்கம் மிகக் குறைவு
ஆயிரம் லட்சம் செலவு செய்து
ஆடம்பரத்தால் நோய் கொண்டார்

காலால் நடந்து கதைத்தவற்றை
Callலால் கதைத்து முடித்த பின்னால்
ஆளாள் சீனி கொழுப்பு என்று
கோலில் போகிறார் இறுதியிலே

பைக்குள் கறி புளி போட்டுக்கிட்டு
சைக்கிளில் போதல் வெட்கமென்று
பைக்கில் ஓடித் திரிந்ததனால்
கைக்கு காலுக்கு சீவனில்லை

நவீனம் நாகரீகம் என்பதெல்லாம்
நலவைத் தந்தால் பாவிப்போம்
கவனம் கொள்வோம் உடல் நலனில்
காப்போம் நோய்கள் அண்டாமல்