வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609417146312"}

வங்கிகளின் வைப்பு இழப்புக்கள் மற்றும் அவற்றின்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் வீழ்ச்சி என்பன எதிர்வரவுள்ள நெருக்கடியை முன்னறிவிப்பதாக அமைந்துள்ளது. எனவே தற்போது வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்திருக்கிறார்.

அவர்மேலும் கூறியிருப்பதாவது:

வங்கியின் வைப்பு இழப்புக்கள் மற்றும் மோசமடைந்துள்ள நம்பத்தன்மை என்பன எதிர்வரவுள்ள நெருக்கடியை முன்னறிவிப்பதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் தமது சிறியளவிலான சேமிப்பையே வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். ஆகவே தற்போது வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், அதிகரித்த வைப்பு இழப்புக்கள் மற்றும் முறைசாரா நிதி நடவடிக்கைகள் என்பவற்றுடனான மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும்.

அதேபோன்று கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முற்பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக பொருளாதார செயற்திறன் மந்தமடைந்திருப்பதுடன் உணவுப்பொருட்களின் விலைகள் பெருமளவிற்கு அதிகரித்திருக்கின்றன. இவற்றினால் சிறுவர்களும் வயது முதிந்தோரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படும் அதேவேளை, செயற்திறன் குறைந்த கல்வி மற்றும் போசணையின்மையின் காரணமாக சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவையனைத்தையும் கருத்திற்கொண்டே அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.