ஜனாதிபதியின் வழிகாட்டலில் சுற்றுலா ஹோட்டல்களுக்கு சலுகை

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1608809568029"}


இவ்வாண்டில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள மின் கட்டணங்களை செலுத்த அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை சலுகைக்காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகைக்காலம் டிசெம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்களின் மின் கட்டண நிலுவை இருக்கும் பட்சத்தில், மின் இணைப்பை துண்டிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுபற்றி இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையானது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகிறது. இத் துறை சார்ந்தவர்களின் எதிர்கால நலன்கருதியும், பொருளாதார சிரமங்களை பரிசீலிக்கும் ஜனாதிபதியின் வழிகாட்டலில் நிவாரணங்களை தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.