“சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை” தெளிவுபடுத்துகிறார் கெஹலிய

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1608547704884"}

வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யும் திட்டம் எதுவுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போரை பதிவு செய்யும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது குறித்துத் தெளிவுபடுத்தும் விதமாக இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். உண்மையில் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அவர், உலகளாவிய ரீதியில் வளர்ச்சி கண்டுவரும் தகவல்தொழில்நுட்ப முறைமை உள்நாட்டு சிறு வணிகங்கள் மற்றும் தகவல் சேகரிப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்ற கருத்தையே வெளிப்படுத்த முற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

‘இது எமது நடுத்தரளவு வணிகங்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இத்தகைய கருத்து மேலும் பல இலங்கையர்களால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான தகவல் தொழில்நுட்ப வலையமைப்புக்கள் ஊடாக பெருமளவான நிதி நாட்டைவிட்டு வெளியேறுகின்றது. ஆகவே வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யும் திட்டம் எதுவுமில்லை” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.