எல்லை நிர்ணய சபை தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய நியமனம்.
சென்ற நல்லாட்சியில் முஸ்லிம் தலைவர்கள் 2/3 பெரும்பான்மையினை கொடுத்து நாவிதன் வெளி பிரதேச சபை, சம்மாந்துறையின் 2 கிராம சேவகர் பிரிவுகள், பொதுவில் பிரதேச சபையின் 6 கிராம சேவகர் பிரிவுகள் (720 ச.கி.) என்பவற்றை உஹன, அம்பாறை தேர்தல் தொகுதிகளுக்காக தரை வார்த்தனர். அதிஷ்டவசமாக அது சட்டமூலமாகாமல் நல்லாட்சி கலைந்து விட்டது. அன்று எல்லை நிர்ணய சபை உறுப்பினர் பேராசிரியர் ஹஸ்புல்லஹ் இச்செயலை கண்டித்தார்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை கரையோரத்தில் தக்க வைக்க வேண்டுமானால் திகாமடுள்ள இரண்டு தேர்தல் மாவட்டங்களாக இந்த புதிய எல்லை நிர்ணயத்தில் ஏற்படுத்த நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
முஸ்லிம் மக்களே நமது மக்கள் பிரதிநிதிகளை இன்னும் நம்ப முடியாது. பிரதேசவத்தை துறந்து ஒற்றுமைப்படுங்கள். ஒருமித்து நமது கோரிக்கையினை புதிய ஆணையாளருக்கு தெரியப்படுத்தி நமது உரிமைகளை வென்றெடுப்போம்.
எம். ரீ. ஹசன் அலி
செயலாளர் நாயகம்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு