கொரோனா வைரஸ் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் PCR மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வாக்குமூலங்களை பெற சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் உயர் அதிகாரிகள், குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில், ஒரு மூத்த அதிகாரி மட்டுமே தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு விலையில் ஜேர்மன் நிறுவனத்திடம் மாத்திரம் PCR கிட்கள் கொள்வனவு செய்வதற்கு சுகாதார பிரிவின் உயர் அதிகாரிகள் சிலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புலனாய் புரிவு ஜனாதிபதியிடம் அறிக்கை ஒன்றை வழங்கியுளளார்.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தவரவில் அது தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்ட குறைந்த விலையிலான PCR கிட்கள் உள்ள நிலையில் இரண்டு மடங்கு அதிகமாக பணம் செலுத்தி PCR கிட்கள் கொள்வனவு செய்யும் மாபியா நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த மோசடியில் தொடர்பு பட்டுள்ளவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் PCR மாப்பியாவுடன் தொடர்புடைய நான்கு முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆய்வக அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.