பிரான்சில் மோசமான நோக்கத்துடன் போலீசாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் போலீசாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கார் மற்றும் தடுப்புகளை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மசோதாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் போலீசாருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே முறுகல் நிலைஏற்பட்டது.
போராட்டம் போராக மாறிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கார், மற்றும் தடுப்புகளுக்கு தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.