அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் எமது நாடும் வடகொரியாவுக்கு நிகரான பொருளாதார நிலைக்கே செல்லும் – சஜித் பிரேமதாச

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1607086895154"}

சர்வதேச நிலைப்பாடுகளை மதிக்காமல் பொருளாதார அபிவிருத்தியை கொண்டுசெல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது எமது நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்கே கொண்டு செல்லும். அதனால் அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில்  கைத்தொழில், வர்த்தக அமைச்சுக்கள் மற்றும்  இராஜாங்க அமைச்சுச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார அபிவிருத்து வேகத்தை வெளியிட்டிருந்தது. அது -1.6 ஆகவே இருந்தது. ஆனால் 2 மற்றும் 3ஆம் காலாண்டு பொருளாதார அபிவிருத்தி வேகத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. 

ஏன் இதனை மறைக்கவேண்டும். புள்ளிவிபரங்களை மறைப்பது பொருளாதார சந்தையில் பாரிய பிச்சினையை ஏற்படுத்தும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை 9வீதத்தில் இருந்து 14வீதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக வரவு – செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி முடியும்.

அரசாங்கத்தின் வரிக்கொள்கை புதிய லிபரல்வாத கொள்கையை கடைப்பிடிப்பதாகவே தெரிகின்றது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள வரிக்குறைப்பின் மூலம் நாட்டின் வருமானம் 600 தொடக்கம் 800 மில்லியன் ரூபா வரை இல்லாமல்போயுள்ளது. 

தனவந்தர்களை போஷிப்பதற்கே இதனை செய்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் எவ்வாறு உள்நாட்டு உற்பத்தியை 9வீதத்தில்  இருந்து 14வீதம் வரை அதிகரிக்க முடியும். மக்களை ஏமாற்றும் கொள்கையையே மேற்கொள்கின்றது.

அரசாங்கம் வித்தியாசமான பொருளாதார கொள்கையையே பின்பற்றி வருகின்றது. இறக்குமதிகளை தடைசெய்திருக்கின்றது. சர்வதேச நிலைப்பாடுகளை மதிக்காமல் பொருளாதார அபிவிருத்தியை கொண்டுசெல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

தேசிய பொருளாதார தரப்படுத்தல் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சர்வதேச மூதலீட்டாளர்களை கொண்டுவர முடியுமா? 

அரசாங்கத்தின் இறக்குமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கைக்கு அரசாகத்தின் பதில் என்ன? 

ஐரோப்பிய நாடுகள் எமது ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் சக்தியாக இருக்கின்றன. அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் ஐரோப்பிய சந்தைகள் எமக்கு இல்லாமல் போகும்.

அதனால் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் எமது நாடும் வடகொரியாவுக்கு நிகரான பொருளாதார நிலைக்கே செல்லும். இது அரசாங்கத்தின் இயலாமையாகும். வங்குரோத்து அரசாங்கம் தோல்வியுற்ற அரசாங்கமாகும் என்றார்.