2020.11.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. தொலைதூரக் கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி சேவை மற்றும் வானொலி ஊடகங்களைப் பயன்படுத்தி கற்பித்தல்
Covid -19 தொற்றுப் பரவலால் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் சரியான வகையில் மேற்கொள்வதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு தொலைதூரக் கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி சேவை மற்றும் வானொலி ஊடகங்களைப் பயன்படுத்தி கற்பிப்பதற்கு ‘EYE அலைவரிசை’ மற்றும் ‘நேத்ரா அலைவரிசை’ போன்றவற்றை ஈடுபடுத்துவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் Covid 19 நிலைமை ஏற்பட்டுள்ளதால் பாடசாலையை ஆரம்பித்தல் நடைமுறைச் சாத்தியமின்மையால், கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு சிறந்த மாற்று வழிமுறையாக தொலைதூரக் கல்வி முறை அவசியமென உணரப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 03 தொடக்கம் 13 ஆம் தரம் வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமாக தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பயன்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
கிராமிய உற்பத்திகளை முறையான வர்த்தகக் கட்டமைப்புக்குள் அபிவிருத்தி செய்து ஏற்றுமதி வழங்கல் மற்றும் இணைப்புச் செய்வதற்கும், இறக்குமதிப் பதிலீடுகளாக உள்ளுர் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கும் இயலுமான வகையில் ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடையாளங் காணப்பட்ட பிரதேசங்களில் பரந்துபட்டுள்ள ஒரேவகையான உற்பத்தியாளர்களை ஏற்றுமதி உற்பத்திக் கிராமக் கம்பனியாக ஒன்று திரட்டி குறித்த உற்பத்திகளை ஏற்றுமதிச் சந்தைக்கு அனுப்புவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும், அதில் உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கையெடுத்தலும், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். விவசாயம், கடற்றொழில், மற்றும் சேவைகள் துறைகளை உள்ளடக்கியதாக குறித்த ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்களை உருவாக்குவதற்கும், முன்னணி ஏற்றுமதிக் கம்பனிகளுடன் வர்த்தக ஒப்பங்களை மேற்கொள்வதன் மூலம் குறித்த ஏற்றுமதிக் கிராமங்களுக்கு நிலைபேறான தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, வர்த்தக அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தேவையான நிதியொதுக்கீட்டை மேற்கொண்டு முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. யானை – மனித பிரச்சினையைக் குறைப்பதற்காக மின்வேலி மற்றும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களத்தால் அகற்றப்பட்ட தண்டவாளங்களை பெறல்
இலங்கையில் 19 மாவட்டங்களிலுள்ள 133 பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது யானை- மனித பிரச்சினை காணப்படுகின்றது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பின்பற்றுகின்ற பல்வேறு மூலோபாயங்களில் பாதுகாப்பு வேலி அமைத்தல், மின்வேலி அமைத்தல் என்பன முக்கியமான அமைகின்றது. இதுவரை 4500 கிலோமீற்றர்களுக்கு மேற்படி 133 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 1500 கிலோமீற்றர்கள் மின்வேலிகளும், பாதுகாப்பு வேலியுடன் கூடிய யானைப் பாதுகாவல் மத்திய நிலையமும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வேலிகளை அமைப்பதற்காக மரத்தூண்கள் பயன்படுத்தப்பட்டாலும், காட்டு யானைகள் அவற்றை பிரட்டி விடுவதுடன், அதற்காக கொங்கிரீட் தூண்கள் அமைப்பதிலும் சிரமங்கள் பலவுள்ளதால் அவையும் சாத்தியமில்லை.அதற்கமைய, குறித்த நடவடிக்கைக்கான மாற்று வழிமுறையாக பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்காக புகையிரதத் திணைக்களத்தின் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களை வனசீவராசிகள் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. பரம்பரைக் கைத்தொழிலாளர்களின் கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களாகப் பயன்படுத்திய வெற்றுச் சன்னம் மற்றும் பாவனையிலிருந்து அகற்றிய மார்புக் கவசத் தகடுகளைப் பெறல்
பரம்பரை நிபுணத்துவக் கைத்தொழில் மற்றும் கிராமியக் கைத்தொழில் துறை இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துவதால், குறித்த கைத்தொழிலாளர்களை வலுவூட்டும் வகையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, குறித்த உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்கும் இறக்குமதிப் பொருட்களுடன் போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் அவற்றின் விலையை நிர்ணயிப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காகவும் அவர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை மானிய அடிப்படையில் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை இராணுவத்தினர், இலங்கை விமானப் படையினர், இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வெற்றுச் சன்னம் (பித்தளை) மற்றும் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட மார்புக்கவசத் தகடுகளை விலைமனுக் கோரல் செயன்;முறை இல்லாமல், 2017 ஆண்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விலைச்சூத்திரத்திற்கு அமைவாக, தேசிய நிபுணர் சபைக்கு வழங்குவதற்கும், ஸ்ரீலங்கா ரெலிகொம், புகையிரதத் திணைக்களம், மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை போன்ற நிறுவனங்களால் அகற்றப்பட்ட செப்பு, பித்தளை, அலுமினியம், போன்ற பொருட்களை தேசிய நிபுணர் சபைக்கு மானிய விலையில் வழங்குவதற்கும் வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. இலங்கையில் உரம் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைமைப்படுத்தல்
ஆரோக்கியமான உணவு உற்பத்திச் செயன்முறைக்கு தரமான பயிர் வேளாண் உற்பத்திக்கும் நிலைபேறான மண்ணைப் பேணுவதற்கும் உரம் உற்பத்தி, விநியோகம், பாவனை என்பன விஞ்ஞானபூர்வமாக இடம்பெற வேண்டும். அதனால், உரம் வீண்விரயமாதல், உரத்தட்டுப்பாடு மற்றும் தரத்தில் குறைபாடுகள் போன்றன இடம்பெறாமல் பொருத்தமான தொழிநுட்ப முறைகளைக் கொண்ட முறையான உரம் விநியோக முகாமைத்துவச் செயன்முறையைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதற்கமைய, தேசிய உரச் செயலகத்தை புதிய தொழிநுட்பத்துடன் கூடியதாக அமைத்தல், தற்போதுள்ள ஆய்வுகூடத்தை மேம்படுத்தல், இலங்கை நெனோ தொழிநுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்ட களப் பரிசோதனை இயந்திரம் உள்ளிட்ட மாவட்ட செயற்பாட்டு மற்றும் மதிப்பீட்டு தொகுதியை வலுப்படுத்தல் விடயப்பரப்புக்குள் உள்வாங்குதல். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் ஆலோசனைக்கமைய தன்னியக்கப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான ரீதியான புறஎல்லைகள் மற்றும் கூறுகளுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையெடுப்பதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சப்புகஸ்கந்தவில் நாளொன்றுக்கு 100,000 பெரல் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தல்
சப்புகஸ்கந்தவில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளாந்தம் 40,000 பெரல்கள் மாத்திம் சுத்திகரிப்பு இயலளவை கொண்டுள்ளதால், தற்போது சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வியின் 25% வீதத்தை மட்டுமே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்குகின்றது. அந்நிய செலாவணியில் பெரும் தாக்கம் செலுத்தும் ஏனைய 75% வீதமானவையை இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது. நாளொன்றுக்கு 100,000 பெரல்கள் வரையான இயலளவை அதிகரிக்கும் சுத்திகரிப்பு விரிவாக்கத்திற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் 2010 ஆம் ஆண்டு சாத்தியவளக் கற்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் இத்துறையில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப மாற்றங்களால் குறித்த சாத்தியவளக் கற்கையின் பெறுபேற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது.அதனால், தற்போதுள்ள பெற்றோலிய உற்பத்திகளின் சுத்திகரிப்பு இயலளவை அதிகரிப்பதற்காக மாற்று வழிமுறைகள் சிலவற்றை ஆராய்வதற்காக கருத்திட்டத்தின் விடயப்பரப்பு, தொழிநுட்பம், இயக்கம், மற்றும் நிதி தொடர்பான சாத்திய வளத்தை தீர்மானிப்பதற்காக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் புதிய சாத்தியவளக் கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையை மீண்டும் தாபித்தல்
1972 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க விவசாயக் கூட்டுத்தாபன சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய வாசனைத்திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபை உருவாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டு 2008 யூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் நிறுவனத்தை மூடுவதற்கு, 2008 யூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபை தற்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவாப்பட்டை, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப்பயிர்ச்செய்கை அபிவிருத்தியுடன் தொடர்புடைய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த இராஜாங்க அமைச்சால் அடையாளங் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான ஒரு பொறிமுறை தேவையாயிருப்பதால், வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையை மீளவும் உயிர்ப்பூட்டி நடாத்திச் செல்வதற்காக பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான சீருடையாக உள்ளுர் உற்பத்தி சேலைகள் வழங்கல்நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் பௌத்த அறநெறிப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கல் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அதற்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான பௌத்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்குவதற்காக 76,000 சேலைகள் தேவைப்படுகின்றன. ஒரு சேலை ரூபா 2,400 ஆவதுடன், அதற்காக 182.4 மில்லியன் ரூபாய்கள் கொள்வனவை லங்கா சலுசல நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.09. 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவை வழங்கல்
2020%2021 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவைக்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டியுள்ளது. அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள 35 மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை கம்பனிக்கும், மேல்மாகாணத்திற்கு வெளியே அமைந்துள்ள 26 மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக எல்ஆர்டீசீ சேவிஸ் (தனியார்) கம்பனிக்கும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவை வழங்கல்
2020%2021 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவைக்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டியுள்ளது. அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள 35 மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை கம்பனிக்கும், மேல்மாகாணத்திற்கு வெளியே அமைந்துள்ள 26 மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக எல்ஆர்டீசீ சேவிஸ் (தனியார்) கம்பனிக்கும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.