ஜனாஷா எரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி !

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

ஜனாசா எரிப்பு வழக்கு
===============

ஜனாசா எரிப்பு விவகாரம் மீண்டும் எரிந்து முடிந்த புகையில் இருந்து நெருப்பாகிறது. முக நூலில் விரல் வேர்க்க வேர்க்க கீ போட் பொத்துப் போகும் அளவு எழுதுபவர்கள் அதிகம்.களத்திற்கு வந்தால் ஒரு காக்காய் கூட இல்லை.அனுபவங்கள் தந்த கசப்பான பாடங்கள் இவை.

ஜனாஸா எரிப்புக்கு இதுவரைக்கும் போடப்பட்ட சுமார் 7 வழக்குகளில் முதல் வழக்கைத் தாக்கல் செய்தது குரல்கள் இயக்கம்தான்.

எனது தலைக்கு மேல் கத்தி ஆடிய காலம் அது.இலங்கையில் பெயர் போன சட்டத்தரணிகள் கூட சொன்னார்கள் அமைதியாக இருங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று.மார்க்க அறிஞர்கள் சொன்னார்கள் துஆவோடு இருங்கள் அது போதும் என்று.இன்னும் சில சிரேஷ்ட சட்டத்தரணிகளின் கதைகளைக் கேட்டு வழக்குக்கு பண உதவி செய்ய முன் வந்தவர்கள் இரவோடு இரவாக ஒழிந்து கொண்டார்கள். அரசியல்வாதிகள் ஆளரவம் இல்லாமல் காணாமல் போனார்கள்.

குரல்கள் இயக்கம் இறுதிவரைக்கும் உறுதியாக இருந்தது.எவர் எதிர்த்தாலும் இவ்வழக்கைத் தாக்கல் செய்தே தீர்வது என்று நாங்கள் உறுதியாக இருந்தோம்.

விண்ணப்பதாரிகளின் பாதுகாப்பைக் கருதி இதனை நாங்கள் விளம்பரப்படுத்தாமல் விட்டுவிட்டோம்.பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது என்று காத்திருந்த அனைவரும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்த பின்னர் புற்றுக்கள் இருந்து வரும் ஈசல்களைப் போல வெளியே வந்தார்கள்.வழக்கைத் தாக்கல் செய்து விட்டு தம்பட்டம் அடித்த அரசியல்வாதிகளை நினைத்து உள்ளூர சிரித்துக் கொண்டோம்.

வழக்குத் தாக்கல் செய்யும் வரைக்கும் தூக்கமில்லாமல் இருந்த குரல்கள் இயக்கத்தின் பல சகோதரர்களை இங்கு நினைவு கூர்கிறேன்.

இது ஒரு தெளிவான மனித உரிமை மீறல்.வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால் தீர்ப்பு எமது பக்கம் வருவதற்கான சாத்தியங்கள் பல உள்ளன.ஆனால் வழக்கு பல காரணங்களுக்காகத் தள்ளிப் போகிறது.

கொறோனா,இதுவரைக்கு சுகாதார செயலாளர் நாயகம் இருவர் மாற்றப்பட்டதால் வழக்கில் செய்ய வேண்டி வந்த மாற்றம், ஏனைய வழக்காளிகள் தங்கள் ஆவணங்களை சரியாகச் சமர்ப்பிக்காமை போன்ற பல காரணங்களுக்காக வழக்கு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

ஆனால் நாம் நம்பிக்கை இழக்கவில்லை.வழக்கு எப்படியும் விசாரணைக்கு வரும்.பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்வரும் 26ம் திகதி வழக்கு வருகிறது. இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கை இருக்கிறது.அதை விட நீதியாளன் மீது அபரிதமான நம்பிக்கை இருக்கிறது.