பாலியல் வன்முறைகளை கண்டித்து அட்டாளைச்சேனையில் அமைதிப் பேரணி !

DSC03296_Fotor

அபு அலா 

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது நாடளாவிய ரீதியில் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளை கண்டித்தும்அதற்கு  நீதி கோரியும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைதிப் பேரணியுடன் கையெழுத்து வேட்டையும்அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (01)  நடைபெற்றது.

இதில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றைச்சேர்ந்தவர்களும் பெண்களும்  கலந்துகொண்டனர். இதன்போது, பாலியல் வன்முறைகள் தொடர்பில்; துரித விசாரணைகளைமேற்கொள்வதுடன்,  சாட்சிகளையும் சேகரிக்கவேண்டும்.

சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் தடுப்புக்காவல் வழங்கப்பட்டு பின்னர், சாட்சிகள் போதாது என்று தள்ளுபடி செய்வதைதடுக்கவேண்டும். சட்ட வைத்திய பகுப்பாய்வுக்காக அனுப்பப்படும் தடயங்கள் துரிமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு சரியான முடிவுகளையும்அறிக்கைகளையும் உரிய காலத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்தவர்களுக்கும் வைத்தியஅதிகாரிகள் அனுப்பிவைக்க வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதி விரைவாக வழங்கப்படவேண்டும். பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு அதிகபட்சதண்டனை வழங்குவதற்கான தண்டனைச் சட்டக்கோவையை அமுல்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துஆதரவு வழங்கி சமூகத்தில் இவ்வாறான வன்முறைகள் நடைபெறாவண்ணம் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள  பொலிஸ் நிலையங்களில் பெண்கள், சிறுவர் பிரிவுகளை  பலப்படுத்துவதுடன், அங்கே தமிழ் பேசும்பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

DSC03299_Fotor DSC03306_Fotor