
நூருல் ஹுதா உமர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தில், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கான நியமனம் வழங்கும் வைபகம் இன்று (25) மாலை அக்கரைப்பற்று மாநகர ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தின் ஊடாக, முதற்கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் குறித்த திட்டத்தினூடாக தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கு, உரிய தகைமையுடையவர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகையினரின் பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் இன்று வழங்கப்பட்டது.
பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்த சுமார் 200 இளைஞர், யுவதிகளுக்கான நியமனம் இன்று இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவர் வைத்தியர் ஏ.உதுமாலெப்பை உட்பட தேசிய காங்கிரஸின் உயர்பீட மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கடந்த பொதுத்தேர்தலின் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பயனாளிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.