அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க தயாராக உள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்பினை வெளியிடுவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியினர்களை கொழும்பில் ஒன்று திரட்டவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் எதிர்க்கட்சியினர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 9 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சவால்மிகுந்த எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளுக்கு எதிராக என்ன செய்வதென்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகிறது.
இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் போது கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக தெரிவித்தார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் 9 ஆம் திகதியளவில் பாரியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது.