மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல்,தொண்டை வலி ஆகியவை எல்லாம் ஏற்படுவது இயல்பானவையே. அதுவும் மழை மற்றும் குளிர் காலத்தில் இவை அடிக்கடி வரும் ஒன்று.
அது கோவிட் -19 நோய்க்கான அறிகுறியா என்று எப்படி கண்டறிவது?
உடல் வெப்பம் 37.8 C-க்கு மேல் இருந்தால் நீங்கள் கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவு வரும்வரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் என்பது ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பாகவும் இருக்கலாம். வேறு அறிகுறிகள் இல்லை எனில் சாதாரண சளியாக இருக்கலாம்.
நீங்கள் இந்த அறிகுறிகள் வந்தால் வாயை மூடி தும்ம வேண்டும்; அடிக்கடி கைகளை கழுவவும். மூக்கடைப்பு போன்றவையும் சளியால் ஏற்படலாம்.
ஆனால் மணம், சுவை உணர்தலை நீங்கள் இழந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
இருமல் ஏற்படுவது எதனால் என்பதை சொல்து கடினம். கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருமல் வரும் அல்லது அவர்கள் ஒரே நாளில் மூன்று, நான்கு முறை தொடர் இருமலால் அவதிப்படுவார்கள்.
உங்களுக்கு அதிக இருமல் இருந்து மூச்சுத்திணறல் இருந்தால் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
கை கழுவுவது, முகக்கவசம் அணிவது ஆகியன கோவிட்-19 தொற்றிலிருந்து மட்டுமல்லாது குளிர் காலத்தில் உண்டாகும் பாதிப்பில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.