இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
படைகளை குறைத்து பதற்றத்தை தணிக்கவும், எல்லையில் முன்பு இருந்த நிலைமையை பராமரிப்பது தொடர்பாகவும் படைப்பிரிவு கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் செக்டாரில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.