ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் மார்க்கத்தின் இரு மருங்கிலும் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நெரிசல்மிகு ரயில் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாலித சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, மருதானை தொடக்கம் பாதுக்க வரை வசிக்கும் 1,630 குடும்பங்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.