பழுலுல்லாஹ் பர்ஹான்
சவூதி அரேபிய நாட்டு பிரமுகரின் நிதி உதவியுடன் ஒலுவில் பாலமுனை ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் அணுசரனையில் காத்தான்குடி -06ம் குறிச்சி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறப்பு விழா 31-05-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை ளுஹர் தொழுகை நேரத்தில் இடம்பெற்றது.
மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் முஹம்மது அலியார் முஹம்மது அப்துர் ரவூப் தலைமையில் இடம்பெற்ற பள்ளிவாயல் திறப்பு விழாவில் ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் தலைவர் அஷஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் அஷ்சூரி , சவூதி அரேபிய நாட்டு பிரமுகரகள்; ,ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி), மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஷாஜஹான் (பலாஹி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,உட்பட ஊர் பிரமுகர்கள்,உலமாக்கள்,பள்ளிவா யல் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேற்படி பள்ளிவாயலின் நினைவுக் கல்லையும்,பள்ளிவாயலையும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டு பிரமுகர் துருக்கி பின் ஜாபிர் உஸைர் அல் கிதாமி அல் உதைமி மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இங்கு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சவுதி அரேபிய நாட்டு பிரமுகருக்கு மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் நிருவாகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் குறித்த மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் ஜனாஸா தொழுகை நாடத்துவதற்கும்,நிகாஹ் மஜ்லிஸ் நடாத்துவதற்கும் இடப்பற்றாக் குறையாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.