பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரம்-தற்போது கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நிலையில் காணப்படும் பகுதிகள்

பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், நாட்டில் கால் பகுதியின மக்கள், ஒரு வித ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப நாட்களாகவே பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதித்தாக 7000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது பிரித்தானியாவில் கொரோனாவால் 453,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 42,143-பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம், பிரித்தானியாவில் இப்போது எந்த பகுதிகள் கட்டுப்பாடுகளுடன் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன என்பது குறித்து வெளியிட்டுள்ளது.
அதில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்களில் உணவகங்கள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்குள் பூட்டப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால், நாட்டின் பிற பகுதிகள் வழக்கு எண்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் எந்தப் பகுதிகள் இப்போது உள்ளூர் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன?
North West – Merseyside, Warrington, Halton, Lancashire, City of
Manchester – Salford, Trafford, Bury, Tameside, Rochdale, Bolton, Oldham
Midlands – Wolverhampton, Oadby & Wigston, Leicester City
West Midlands – Birmingham, Sandwell and Solihull
West Yorkshire – Bradford, Kirklees and Calderdale
North East – Northumberland, North Tyneside, South Tyneside, Newcastle Upon Tyne, Gateshead, Sunderland and County Durham
Scotland – Renfrewshire, East Dunbartonshire, Glasgow City, East Renfrewshire and West Dunbartonshire
Wales – Caerphilly County Borough, Rhondda Cynon Taf, Llanelli, Cardiff, Swansea, Bridgend, Merthyr Tydfil, Blaenau, Gwent, Neath, Port Talbot, Torfaen, Vale Of Glamorgan.
மேலும், வரும் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இதே கட்டுப்பாடுகள் Conby, Denbighshire, Flintshire மற்றும் Wrexham ஆகியவற்றிற்கு பொருந்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.