“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன? “

athaullah

அரசியலுக்கும் அப்பாற்பட்டது!

நேற்று 14.02.2020 அவர் எங்களோடுதான் பகல் உணவு உண்டு கொண்டிருந்தார். முடிந்து செல்ல கிட்டத்தட்ட நான்கு மணியைத் தொட்டிருக்கும். அவரிடம் எந்த சலனமும் இல்லை. வழமைபோலவே நகைச்சுவையான பாணியில் பேசிக்கொண்டே சாப்பிட்டார். பின்னர் எல்லோருடனும் சிரித்து பேசி மகிழ்ந்தவாறே அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் விளையாட்டுப் போட்டிக்கு நேரம் நெருங்கிவிட்டதாக கூறி விடைபெற்றார்.

athaullah

 

அவரிடம் சாய்ந்தமருது விடயம் என்னவானது? என்று கேட்க மிகவும் ஆவலாக இருந்தது. காரணம் ஏற்கெனவே பலர் வெள்ளிக்கிழமை வர்த்தமானி வெளிவரும், சாய்ந்தமருதுக்கு சபை கிடைக்கும், என்றெல்லாம் எழுதி இருந்தனர். ஆனால் விடிந்து பின்னேரம் மூன்று மணியையும் தாண்டிவிட்டது அதுபற்றி எந்தவித அறிவுப்பும் இல்லை, இதோ அதாவுல்லாஹ்வும் அது தொடர்பில் எந்த அக்கறையும் இல்லாது இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டோம்.

எல்லாம் முடிந்து விடைபெற்றுச் சென்றபின்னர் முகப்புத்தகத்தை திறந்ததும் தான் தெரிந்தது சாய்ந்தமருதில் வெடி சத்தம் வானைப்பிளக்கிறது என்று. அப்படியானால் இது அனைத்தையும் செய்துவிட்டு வந்துதான் அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் இருந்தாரா இவர்? இதற்காக அதற்கு முந்தைய நாள்வரை பல தடைகளைத் தாண்டி முயற்சித்து வெற்றியைப் பெற்றுவிட்டு ஆமைபோல் அப்படியே அமைதியாக இருக்கிறாரா? அதாவுல்லாஹ்வைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

இதுவே ஹக்கீம் ரிசாட் என்றால் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுப்பதற்கே ஊர்வலமும் கௌரவிப்பும் கொண்டாட்டமும் செய்வார்களே? இது என்ன இவர் இப்படியென்று, என்று குழம்பிப் போனேன்.

இரவு எட்டு மணிக்குப் பின்னரும் சாய்ந்தமருது மக்கள் தங்கள் சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று அதாவுல்லாஹ்வை அழைத்து ஊர்வலம் செல்ல, கௌரவிப்பு நடாத்த கிழக்கு வாசல் நோக்கி ஓடி வந்தார்கள். ஹக்கீம் ரிசாட் என்றால் கட்சித் தலைமை முதல் கடைசி காளான்வரைக்கும் தாங்களே சாதித்ததாக கூறி மங்களம் பாடுவர்கள் அல்லவா?

ஆனால் இந்த அதாவுல்லாஹ் இவற்றுக்கெல்லாம் ஆசையில்லாத கனவான் அரசியல்வாதி என்பதை அங்கும் நிரூபித்தார். “இல்லை இப்போது வேண்டாம் செல்லுங்கள், நீங்கள் அமைதியாக கொண்டாடுங்கள், நான் பிறகு வருகிறேன்” என்பதுதான் அவர் பதிலாக இருந்தது. ஆச்சரியமடைந்தேன். மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றியே அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் இவர் எப்போதும் வித்தியாசமானவர்தான்!

ஒன்றே ஒன்று நியாபகம் வந்தது, ஒரு தடவை “சேர் இந்த ஊருக்கு எத்தனையோ சேவை செய்திருக்கிறீர்கள், மக்கள் மறந்துவிட்டார்கள் அதனை. இப்போது நவீன மீடியாக்கள் உள்ளன. அதில் அடிக்கடி அவற்றை நியாபகப்படுத்த வேண்டும் என்றார் ஒருவர், அதற்கு அதாவுல்லாஹ் சொன்ன பதில்

“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன? “

அதாவுல்லாஹ் அரசியலுக்கும் அப்பால் நற்பண்புகளால் நிறைந்தவர்!

Ashraf Ahamed