எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இதுவரை வெளியான தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனமே ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்திருந்ததாக கட்சியின் தலைவர்கள் இங்கு குறிப்பிட்டனர்.
சஜித்தின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே பாவிக்கப்படவில்லை, எனினும் கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சியென்பது குறிப்பிடப்பட்டுள்ளதாக இங்கு சம்பந்தன் குறிப்பிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் யாரும் நிறைவேற்றுவதில்லை, ஆனாலும், சஜித்தின் விஞ்ஞாபனம் ஏற்கக்கூடியது என சுமந்திரனும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அபிப்பிராயமும் கேட்கப்பட்டது. நாளை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் பேசிய பின்னர் பகிரங்க அறிவிப்பொன்று வெளியிடப்படவுள்ளது.
Thanks- tamilan