எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு கிழக்கில் பிரசாரங்களில் ஈடுபடுவது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் இணக்கத்திற்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் அண்மையில் தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். கோத்தபாய இந்த வாரம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் மிகவும் நட்புறவான முறையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதிக்கும் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இடையில் இன்று பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.இதில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இடையிலான கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைவர்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச சார்பில் வடக்கு கிழக்கில் நடைபெறும் தேர்தல் பிரசாரங்களில் உரையாற்ற உள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகாரபூர்வமாக உடன்படிக்கையை ஏற்படுத்தும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.