எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை களமிறக்க அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவருக்கு ஆதரவான தரப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ,ஜே வி பி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் பேச்சு நடத்த சஜித் ஆதரவு அமைச்சர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று அமைச்சர் ராஜித்தவின் இல்லத்தில் கூடிய சஜித் ஆதரவு அமைச்சர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு குறித்தான புள்ளிவிபரங்களை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.அதேசமயம் ரணில் தரப்பும் ரணிலுக்கு சார்பான வகையில் சில புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ரணிலும் சஜித்தும் மீண்டுமொருமுறை சந்திக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் ரணில் அதற்கான இணக்கத்தை இதுவரை வெளியிடவில்லை.
( Thanks – Tamilan)