இலங்கையின் தற்போதைய பெயரை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படுகின்ற நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாத்திரம் அழைக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.சிங்கள தொலைகாட்சி ஒன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்களத்தில் ஏக்கிய ரஜ்ய என மாற்றுவதற்கு இணக்கம் வெளியிட்ட போதிலும், ஏக்கிய ரஜ்ய என்பதன் ஆங்கில பதமான ஒற்றையாட்சிக்கு ஒரு போதும் இணக்கம் இல்லை என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒற்றை என்பது ஒரு நாடாகவே தங்கள் தரப்பினர் கருதுவதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் ஈழத்திற்காக 30 வருடங்கள் போரிட்டவர்கள் எனவும் அவர்கள் தற்போது வரையில் மத்திய நிலையில் இருப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எதிர்பார்ப்பதனை போன்று புதிய அரசியலமைப்பிற்கான விடயங்களை சமர்ப்பித்து கொள்ள முடியாமல் போனால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை தோற்கடித்து இனவாத குழுக்கள் சிலர் அதிகாரத்திற்கு நியமிக்கப்படும் அவதானம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.