இலங்கையின் ஜனரஞ்சகமான அரசியல்வாதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மிகிந்தலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறந்தவர் எனக் கூறி மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர் பதவிகளை வகித்த 16 பேர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை பார்த்து, அடுத்த முறை தமது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் பறிப்போய் விடுமோ என்று கருதி எதிர்க்கட்சிக்கு சென்று விட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதி ஒருவரை கொண்டுள்ள கட்சி, கட்சியின் அனைத்து ஜனாதிபதிகளும் இரண்டு தடவைகள் பதவி வகித்துள்ளனர்.இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக்கும் பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இருப்பதாகவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.