பயிற்சி முடித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகள் -முதலமைச்சர் உறுதி!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் பயிற்சி முடித்து பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு கொடுப்பனவுகள் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மட்டக்களப்பில் பயிற்சி முடித்த ஆசிரியைகளுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆதரவுடன் முன்பள்ளி பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதிகளாக கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், கல்வி அதிகாரிகள், பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்:
என் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறைக்கு தேவைப்படும் சகலவித தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுப்பேன், என்றும் பயிற்சி முடித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு  கொடுப்பனவுகள் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன். என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிற்சியை முடித்த 114 பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
_Collage_Fotor DSC_2337_Fotor_Collage_Fotor