ஆரம்பித்திலேயே புஸ்வானமான நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.நீண்ட நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வருகின்றேன்.
எனது நாடாளுமன்ற வாழ்வில் சில நம்பிக்கையில்லா தீர்மானங்களை பார்த்திருக்கின்றேன்.எனினும், ஆரம்பத்திலேயே காற்று இறங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவேயாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஓர் குறியீடாக ரணிலை பயன்படுத்திக் கொள்ளப்பட்ட போதிலும் இது உண்மையில் அரசாங்கத்திற்கு எதிரானவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ச இதற்கு கையொப்பமிடவில்லை.
“விமல் வீரவன்ச சொல்கின்றார் இதனைக் கூறி ஆதல் எடுக்குமாறு” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மூன்று குழுக்கள் இருப்பதனை பார்க்க முடிகின்றது.இதேவேளை, ராஜபக்சக்கள் தூர நோக்குடன் செயற்படுகின்றார்கள் என்பது இதன் மூலம் புரிகின்றது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.