2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், இந்தியா அவர் வெற்றிப்பெறுவதற்கான வழிகளை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதற்கு கோத்தபாயவின் பங்களிப்பு அதிக முக்கியமானது. எனவே அவரை வெற்றிப் பெற செய்ய வேண்டியது தேசப்பற்றுள்ள இந்தியர்களது கடமை என்றும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.