இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெலவை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியமைத் தொடர்பில் ரமீத் ரம்புக்வெல கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த விபத்து சம்பவம் நாவல பகுதியில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ரமீத் ரம்புக்வெலவின் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை,
ரமீத் ரம்புக்வெல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.