அமெரிக்க ஆய்வு கூடத்துக்கு ஆந்திராக்ஸ் நோய்க்கிருமிகளை அனுப்பியதால் பரபரப்பு !

826565e9-7405-4359-a7e8-76c98b9828d1_S_secvpfஅமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாகாண ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அந்த வகையில் மேரிலாந்து, டெக்சாஸ், விஸ்கான்சின், கலிபோர்னியா, நியூஜெர்சி உள்ளிட்ட 9 மாகாணங்களுக்கும், தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவக்கூடத்துக்கும் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா அனுப்பப்பட்டது. இதை மேரிலாந்து ஆய்வுக்கூட நிர்வாகிகள் கண்டுபிடித்தனர்.

உடனே இது குறித்து அனைத்து மாகாணங்களுக்கும், தென்கொரியா ராணுவ தளத்துக்கும் தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இந்த கிருமியால் டெக்சாஸ், விஸ்கான்சின் மற்றும் டெலவர் மாகாணங்களில் 4 பேர் லேசாக பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாக்டீரியா அழிக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விசாரணையை தொடங்கி உள்ளது.