விலகிய நால்வருக்கும் பதிலாக புதிய எம்.பி.கள் நியமிக்கப்படுவர் !

 

images (2)அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்களுக்கும்  பதிலாக சுதந்திரக் கட்சியிலிருந்து   புதிய   எம்.பி. க்கள்  அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்.  நான்கு அமைச்சர்கள் விலகியமையினால்  அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று  என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன  தெரிவித்தார். 

 மேலும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாக வர விரும்பமாட்டார்.   மீண்டும் எம்.பி. யாகுமளவுக்கு  அவருக்கு மூளையில் வருத்தம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திலிருந்து   சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்கள் விலகினர். அவர்களுக்கு பதிலாக சுதந்திரக் கட்சியிலிருந்து   புதிய   எம்.பி. க்கள்  அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்.  நான்கு அமைச்சர்கள் விலகியமையினால்  அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த பதவிகளை வெறுமனே விட முடியாது. அவற்றுக்கு அமைச்சர்களை நியமிக்கவேண்டும். 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாக வர விரும்பமாட்டார்.   மீண்டும் எம்.பி. யாகுவதற்கு அவருக்கு மூளையில் வருத்தம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.      சிலர் எந்த முயற்சியையும் எடுக்கலாம்.  ஆனால்   மஹிந்த ராஜபக்ஷ  எம்.பி்.யாக வரமாட்டார் என்றே நம்புகின்றேன்.   தற்போது முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் இருப்பவர் பாராளுமன்ற உறுப்பினராக வரமாட்டார். 

கேள்வி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்று கூறுகின்றனரே? 
பதில்  கொண்டுவரட்டும்.   அவர்கள் எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறினர்.  ஆனால் என்ன நடந்தது? 
கேள்வி  ஜூன் மாதம்  9 ஆம் திகதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணை வரும் என்று  மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளாரே? “
பதில்  அவர் யார் கூறுவதற்கு?  சுதந்திரக் கட்சி கூறினால் பார்ப்போம்.     சுதந்திரக் கட்சி எம்.பி. க்கள்   ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.    இனி ஒன்றும் நடக்காது. 
கேள்வி பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? 
பதில் அது எனக்குத் தெரியாது.   தெரிந்தால் கூறுவேன்.  அடுத்தவருடம்  ஏப்ரல் வரை காலம் உள்ளது. 
கேள்வி ஐக்கிய தேசிய கட்சி விரைவாக பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்று கூறுகின்றதே? 
பதில்  தற்போது அவர்கள்  அப்படிக் கூறுவதில்லை.