புதிய சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்..?

நிதி விடயங்களை கையாழ்வது தொடர்பில் நேற்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு நேற்று பேரளிவை ஏற்படுத்தும் வகையிலான சட்டமூலம் ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. “நேரடி வைப்பிடலுக்கான முகாமைத்துவ முறை” எனும் அச்சட்மூலமானது பாராளுமன்றம், நிதியமைச்சு என்பவற்றுக்குள்ள நிதி அதிகாரத்தை இல்லாது செய்து மத்திய வங்கிக்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர், அரசாங்கத்திற்கு கிடைக்கும் கடனில் 10 சதவீதத்தை தனக்கு விருப்பமான இடத்திலிருந்தும் விருப்பமான ஒப்பந்தத்தின் மூலமும் பெற முடியும்.

மேலும் அவ்வாறான கொடுக்கல் வாங்கலின் போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் அதற்கெதிராக சிவில் மற்றும் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியாதளவிற்கு அச்சட்டமூலத்தில் சட்ட ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அச்சட்ட மூலத்தின் ஐந்தாம் உறுப்புரையில் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் விதிமுறைகளிலிருந்தும் விடுவிப்பு வழங்கப்படுவதாக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.