கிழக்கு மாகாண நிலமைகளை முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமெரிக்கத்தூதுக் குழு !

DSC_2023_Fotor

 

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

 கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி கேட்டறிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த மைக் ரீட் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரின் காரியலயத்தில் சந்தித்தனர்.

DSC_2041_Fotor

குறிப்பிட்ட சந்திப்பின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுடன், உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
DSC_2049_Fotor