எனது அமைச்சின் கீழ் வரும் சகல திட்டங்களும் உங்களது பிரதேசங்களில் நிறைவேற்றித் தரப்படும்  : கம்பஹாவில் அமைச்சர் ஹக்கீம்

அஷ்ரப் ஏ சமத்
 
முஸ்லிம்  காங்கிரஸ் கட்சி  கம்பஹா மாவட்டத்தில் மினுவான்கொட, அத்தனகல்லை, வியமக பிரதேச சபைகளில் தணித்து  போட்டியிடுவதன் நோக்கம். இப் பிரதேசத்தில் ஜ.தே. கட்சி அமைப்பாளர்கள்  எமது பிரதேசத்தில் உள்ள முஸ்லீம்   வேட்பாளர்களை உள்வாங்காமல்  முஸ்லீம்களின் பிரதேசங்களிலும்  பெரும்பாண்மையினரை நிறுத்தி ஆழ நினைத்தாலேயே  எமது கட்சி உடனடியாக களத்தில் இறங்கி தணித்து போட்டியிடுகின்றது.    என முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம்  நேற்று(1)  முஸ்லீம்காங்கிரஸ் கம்பஹா மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி கூட்டங்கள் கள்லொழுவ, திகாரிய, கஹட்டோவிட்ட,  மல்வானை, மீறிகம ஆகிய பிரதேசங்களில் மேல் மாகாண முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணர் சாபி ரஹிம் ஏற்பாட்டில் நடைபெற்றது.   
 
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்  –  
 
இந்த உள்ளுராட்சித் தேர்தல் முறையினால்  சிறுபாண்மையினர்க்கு அநீதி உள்ளதனை  கடந்த 3 வருடங்களாக பிரதம மந்திரி ரணிலிடம் எடுத்துக் கூறி அதனை விவாதித்து நியாயங்களை எடுத்துக் கூறினோம்.   அதனை பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கும் தர்ணத்தில்  50க்கு 50 கலப்பு முறை சிறுபாண்மையினர் பிரதேசங்களில் இரட்டை அல்லது மூன்று அங்கத்துவ பிரநிதித்துவத்தினை ஏற்படுத்தினோம். அது மட்டுமல்லாமல் கடசி தேசிய ரீதியில் எடுக்கும் வாக்குகளைக் கொண்டு அவர்களுக்கு பட்டியல்  பிரநிதித்துவம் உறுதிப்படுத்தும் முறைகளையும் உள்வாங்கித்தான் இந்த   வட்டார முறைக்கு நாங்கள்  பாராளுமன்றத்தில் வாக்களித்தோம். 
 
இங்கு தனித்துக் தேர்தல்  கேட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் பிரதேசங்களில் முழுக்க முழுக்க ஜ.தே.கட்சி அங்கத்தவர்கள் இல்லாது  எமது முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணர்களை வேட்பாளா்களை நிறுத்தி அங்கு யானைச் சின்னத்தில் தர்தல் கேட்கின்றோம்.   எமது கட்சி 65 சபைகளில் தணித்தும் இணைந்து இம்முறை உள்ளுராட்சித் தர்தல்களில் குதித்துள்ளோம்.
தற்போது  இலங்கை மத்திய வங்கி ஊழல் போன்ற தேசிய பிரச்சினைகளை பெரிதளாவாக பேசும்  தலைப்புக்கலாக இருந்தாலும்  உள்ளுர் பிரதேசங்களில் இம் மக்களது குடிநீர், கழிவு நீர் , கர்ப்பிணிப் தாய்மார்களது மருத்துவ நிலையம்,  பாதை, பாடசாலை ,வீதி லாம்பு, போன்ற  அபிவிருத்தி பற்றியே கிராமங்களில்  உள்ள மக்கள்   சிந்திக்கின்றனர். அத்துடன்  கோரிக்கைகளையும் முன் வைக்கின்றனா். இவைகள்  எனது அமைச்சின் கீழ் வரும் சகல திட்டங்களும் உங்களது பிரதேசங்களில் நிறைவேற்றித் தரப்படும்  எனவும் அமைச்சர் ஹக்கீம் அங்கு வாக்குறுதியளித்தார் .
நீங்கள் அளிக்கும் வாக்குகளினால் தான் நாம் பெறும் இரண்டு  மூன்று  ஆசனங்கள்  ஜ.தே.கட்சியினருக்கு சபைகளை ஆட்சியமைக்க தேவைப்படும் . அத்தருணத்தில் தான் நாம்  மினுவான்கொடை ஜ.தே.கட்சி அமைப்பாளர்  எட்வார்ட் குணசேகர போன்றோாிடம் சிறுபாண்மை முஸ்லிம்களது வாக்குப் பலத்தினை பிரயோகிக்க முடியும்.    .  முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க முஸ்லீம்களின் வாக்குகளைப் பயண்படுத்தி விட்டு காலத்துக்கு காலம்  கருவேப்பிளை போன்று பாவித்து விட்டு துாக்கி வீசுபவருக்கு ஒரு பாடம் பெப்ரவரி 10ஆம் திகதி படிப்பித்தல் வேண்டும்.  எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அங்கு தெரிவித்தார் .