அமைச்சர் ஹசனலியின் துரித நடவடிக்கையினால் பொத்துவில் ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு!

Hasan_Ali

மீரா.எஸ்.இஸ்ஸடீன்  –அமைச்சின் ஊடகச் செயலாளர்  

 ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் சுகாதார,சுதேச இராஜங்க அமைச்சருமான  எம்.ரி .ஹசனலி அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியினால் பொத்துவில் கல்வி வலயத்தில் மிக நீண்ட காலமாக  நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத தீர்வு காணப்பட்டுள்ளது .

கடந்த வாரம் பொத்துவில் அல் -முனவ்வரா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் என்.கே .கரீம் தலைமையில் நடைபெற்ற நிழல் பிரதி எடுக்கும் இயந்திரத்தைக்   கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தபோது   வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ .எம்.அஸீஸ் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் ஹசனலி அந்த இடத்திலேயே வைத்து தனது கைபேசியூடாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் அழ-ஹாபீஸ் நஸீர் அஹமதுடன் தொடர்பு கொண்டு பொத்துவில் கல்விச் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து 45 நாற்பத்தைந்து ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு திங்கள் முதல் பணியாற்ற உள்ளனர் .  

DSCN3758_Fotor