அரசியலுக்கு வீரம் மட்டும் போதாது, யூகமும் வேண்டும் : ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து தன்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்கடந்த மே மாதம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர், ரசிகர்களை சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.அன்றைய தினம் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பேசியபோது ஆண்டவன் என்னை நடிகனாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அதன் படி நான் நடிகனாக உள்ளேன்.

நாளை நான் என்னவாக அவர் விரும்புகிறாரோ அதன் படி நடந்து கொள்வேன் என்றார். மேலும் போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்றார்.இதை கூறுவிட்டு ரஜினிகாந்த் சுமார் 6 மாதங்கள் பொறுமையாக இருந்ததால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவர் வழக்கமாக அடிக்கும் ஸ்டென்ட் என்றெல்லாம் தெரிவித்தனர்.இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது ரஜினி பேசுகையில், நான் அரசியலுக்கு வருவேனா, வரமாட்டேனா என்பது குறித்து பத்திரிகைகள் மிகவும் ஆவலுடன் உள்ளன. போர் வந்தா வருவேனு சொன்னேன். போர் வந்துவிட்டதா.அரசியலுக்கு வீரம் மட்டும் போதாது. யூகமும் வேண்டும். வரும் 31-ஆம் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நான் அறிவிப்பேன் என்றார்.