எம்.வை.அமீர்
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது என்று கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையின் மாதந்த அமைவு 2015-05-27 ல் கல்முனை முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் தலைமையில் கூடியபோது வித்தியாவின் கூட்டு வன்புணர்விற்குப் பின்னரான கொடூரக் கொலையைக் கண்டித்தும் வித்தியாவின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்தும் பிரரணை ஒன்றை எதிர்க்கட்சித்தலைவர் ஏ.அமிர்தலிங்கம் சபையில் சமர்ப்பித்தார்.
குறித்த நிகழ்வை மிகவும் வன்மையாக கண்டித்த எதிர்க்கட்சித்தலைவர், துன்பத்துடம் இருந்த வித்தியாவின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நன்றியும் தெரிவத்தார்.
வித்யாவின் படுகொலையை சபைமுதல்வர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட எல்லா உறுப்பினர்களும் கண்டித்து உரையாற்றியதுடன் சபையில் பிரரணை ஏகமனதாக நிறைவேற்றியது.