தேர்தல் கூட்டு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச மற்றும் சுசில் பிரேமஜயந்த சந்திப்பு

FILE IMAGE
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
FILE IMAGE
 இந்த சந்திப்பு நேற்றைய தினம் மகிந்தவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் இரண்டுமணி நேரம் நடைபேற்ற இந்தச் சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்வரும் தேர்தல் கூட்டு என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
 கூட்டு எதிரணி முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் தேர்தல் தொடர்பிலான கோரிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதகமாக பரிசீலிக்காத பட்சத்தில் அவர்களுடன் கூட்டுச்சேர்வது என்ற பேச்சுக்கே இடமில்லையென அமைச்சர்களிடம் மகிந்த கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, சந்திப்பின் பின்னர் மேற்படி அமைச்சர்மார் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.