நீதிமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் ஆக்கப்பட்ட கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிப்பதில் தேர்தல் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.நீதிமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் ஆக்கப்பட்ட கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிப்பதில் தேர்தல் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
மகிந்த அணியால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் செய்யப்பட்ட கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
மகிந்த அணியால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வெற்றிடம் ஏற்படும் போது அந்த வெற்றிடத்தை நிரப்பும் வழிமுறைகள் தொடர்பில் அரசமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால், பதவி விலகினால் புதிய உறுப்பினரை நியமிக்க சட்டஏற்பாடுகள் உள்ளன.நீதிமன் றால் உறுப்பினர் ஒருவர் பதவி நீக்கப்பட்டால் புதியவரை நியமிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அந்தக் கடிதத்தில் மகிந்த அணி குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக புதிய உறுப்பினரை நியமிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.