உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) தனித்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) தனித்து போட்டியிடவுள்ளதாக இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் யாழ். மாவட்ட இணை செயலாளர்களான சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஷ்வரன் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளது. 1998ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம்.பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசியலில் போட்டியிட்டோம். இன்றைய சூழ்நிலையில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம் தோல்வி அல்லது இலக்கை அடையவில்லை.இதனால் அரசியல் கைதிகளின் கோரிக்கை வெற்றியடையவில்லை. அதற்கு காரணம் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பாராமுகம் ஆகும் என குறிப்பிட்டுள்ளனர்.