திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்த கடுவலை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகுமவின் முன்னாள் பணிப்பாளர் கே.ரணவக்க, மேலதிக பணிப்பாளர் பந்துல திலக்கசிறி ஆகியோருக்கும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் பகுதியில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உடல்நிலை கருதி பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் அதனை நிராகரித்த நீதவான் தம்மிக ஹேமபால விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.