நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக்கு யார் பொறுப்பு? நாமல் கேள்வி

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக்கு யார் பொறுப்பு? என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் கேள்வியெழுப்பியுள்ளார்.அத்துடன், இவ்வாறான நிலை ஏற்படும் முன்னர் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றின் ஊடாக அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.