கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? அமைச்சரவையில் தெரிவித்த சம்பிக்க

அரசில் அங்கம் வகிப்பதையிட்டு வெட்கமடைகின்றேன். கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? என அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.அரசில் அங்கம் வகிப்பதையிட்டு வெட்கமடைகின்றேன். கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? என அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

 தேசிய அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. அவ்வேளையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

“மேல்மாகாண அபிவிருத்திக்குரிய அமைச்சு ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் உரிய வகையில் நிதி ஒதுக்கிடப்படுவதில்லை. பெயருக்கு மாத்திரம் அமைச்சுப் பதவியை வைத்திருப்பதால் என்ன பயன்? இதே கோணத்தில் பயணிக்கமுடியாது. அரசில் அங்கம் வகிப்பதுகூட கடும் எரிச்சலாகவே இருக்கின்றது.
அபிவிருத்தித் திட்டங்களை சுயாதீனமாக முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. நல்லாட்சியின் கோட்பாட்டுக்கு இது ஏற்புடையதல்ல” என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.