மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் சம்பந்தமான பிரேரணைகளை எல்லை நிர்ணய சபைக்கு அளிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் நவம்பர் 2ம் திகதியோடு முடிவடைகிறது.
எல்லை நிர்ணயங்கள் சரியாகச் செய்யப்படாதவிடத்து முஸ்லிம்களுக்கான மாகாண சபைப் பிரதிநிதித்துவம் இன்னும் அதிகமாகப் பாதிக்கபடப்போகிறது.முஸ்லிம் அரசியல் கட்சிகள் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது வழமை போல அப்பாவி முஸ்லீம்கள்தான்.
இலங்கையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறையாத வண்ணம் எல்லை நிர்ணயம் எவ்வாறு செய்யப்படவேண்டும் என்பது சம்பந்தமான பிரேரணைகளை உள்ளடக்கிய பூரண அறிக்கை ஒன்றை குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழு மேற்கொண்டுவருகிறது.சுமார் 15 பேர் கொண்ட ஆய்வுக்குழு இந்த அறிக்கைக்காக அயராது உழைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த அறிக்கை விரைவில் மக்களுக்கு வெளியிடப்படுவதோடு இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கும் கொடுக்கப்படும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரேரிப்புகளின் பிரகாரம் உங்கள் பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள்,அமுக்கக் குழுக்களின் உதவியோடு உங்கள் பிரதேசம் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதை சாத்தியப்படுத்துவது உங்கள் கடமை.
இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் அல்லது உங்கள் பிரதேசத்தில் இது சம்பந்தமான விளிப்புணர்வுக் கூட்டங்கள் அவசியப்படின் நீங்கள் எம்மை எமது முக நூல் பக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளலாம்.எமது இயக்க உறுப்பினர்கள் உங்களுடைய பிரதேசங்களுக்கு வந்து இது சம்பந்தமாக உங்கள் பிரதேசங்களில் செய்யப்படவேண்டிய விடயங்களையும், முறைகளையும் பற்றி ஆலோசனைகள் கூறுவார்கள்.