எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில், சம்பந்தன் எம்.பி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
கடந்த இரு வாரங்களாக எதிர்க்கட்சி தலைவர் பதவி இழுபறி நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.