கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை மற்றும் செம்மண்னோடை கிராமத்தில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியலில் இருக்கும் வரை அதிகாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்துக்கொண்ட அரசியல், பத்து வருடத்திற்கு என்னை அசைக்க முடியாது என முன்னாள் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
என்னுடைய இருபது வருட அரசியல் வாழ்க்கையில் கட்டடங்களை திறந்து வைப்பதாயின் முற்றுமுழுதாக கட்டுமானம் முடிந்த பின்னர் தான் திறந்து வைப்பேன், ஆனால் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் கட்டடம் கட்டி முடிப்பதற்கு முன்னரே திறந்து வைத்துவிட்டுச் செல்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கிழக்கு முதலமைச்சர் வந்ததும் கிழக்கு மாகாணத்தில் இருந்த யாரையும் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்னாக அனுப்ப மாட்டேன் என சூழூரைத்தார்.
ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக வந்ததன் பின்னர்தான் வெளிநாட்டுக்கு பணிப்பெண்கள் செல்வது அதிகரித்துள்ளது.
அரசியலில் பக்குவப்பட்டு இருந்தால் மாத்திரம்தான் நல்ல அரசியல் தலைவர்களாக பெயர் சொல்ல முடியும், முன்னாள் முதலமைச்சரின் தவறான வழிகாட்டலினால் அதன் உறுப்பினர்கள் பதவி ஆசைக்காக 13ஆவது திருத்தத்தில் கேட்கின்ற அதிகாரத்தைக் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இருந்தனர் என தெரிவித்துள்ளார்.